விவசாயிகளுக்கு மானியத்தில் தக்கைப்பூண்டு விதைகள்
விவசாயிகளுக்கு மானியத்தில் தக்கைப்பூண்டு விதைகள்
ADDED : ஜூலை 15, 2026 03:17 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி வட்டார வேளாண் விரிவாக்கம் மையங்களில் அரசின் 'மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் தக்கைப்பூண்டு விதைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மண்ணின் வளத்தை அதிகரிக்கவும், உகந்த இயற்கை உரமாக மாற்ற தக்கைபூண்டு சிறந்த பயிராகும். மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்தி, உவர் மற்றும் மணல் நிலங்களை சீர்படுத்துவதுடன், மண்ணில் நீரை தேக்கி வைக்கும் திறனை அதிகப்படுத்துகிறது. ஈரப்பதத்தை மேம்படுத்தி மண்ணரிப்பை தடுக்கிறது. இவை வயல்களில் அடர்த்தியாக வளர்வதால் பிற களைகள் முளைப்பதை தடுக்கிறது. மேலும் வேர் நுாற் புழுக்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
வாடிப்பட்டி, சோழவந்தான் மற்றும் நாச்சிகுளம் வேளாண் விரிவாக்கம் மையங்களில் தக்கைப்பூண்டு விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது என வேளாண் உதவி இயக்குனர் பாண்டி தெரிவித்தார்.
