ADDED : ஏப் 17, 2025 06:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி (எஸ்.எல்.சி.எஸ்.,) மாணவர்கள் ஹரிஹரன், சாகித்யா ஆகியோர் ஏ.சி.சி.ஏ., (அசோசியேஷன் ஆப் சார்ட்டர்ட் சர்ட்டிபைடு அக்கவுண்டன்ட்ஸ்) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
உலகளவில் நடத்தப்பட்ட இத்தேர்வில் இக்கல்லுாரியை சேர்ந்த பி,காம்., ஹானர்ஸ் (ஏ.சி.சி.ஏ.,) பிரிவு மாணவர்கள் பங்கேற்றனர். நேற்று முன்தினம் இதன் முடிவு வெளியாகியது. இதில் வென்ற மாணவர்களை முதல்வர் சுஜாதா, துணைமுதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா, துறைத் தலைவர் செல்வராஜ் பாராட்டினர்.