/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றத்தில் காரில் திடீர் தீ
/
திருப்பரங்குன்றத்தில் காரில் திடீர் தீ
ADDED : ஏப் 29, 2025 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருப்பரங்குன்றம் வேடர் புளியங்குளம் சிந்தன் நகர் சுந்தரமூர்த்தி நேற்று மாலை திருநகர் இரண்டாவது பஸ் நிறுத்தும் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு காரில் வந்தார். அவரது மகள் காரை ஓட்டி வந்தார்.
சுந்தரமூர்த்தி மருத்துவமனைக்குள் சென்றார்.அவர் நிறுத்திய காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததை பார்த்த மகள் அருகே உள்ள மெக்கானிக்கை அழைக்க சென்றார். அதற்குள் காரின் முன் பகுதியில் தீ  எரிந்தது. திருப்பரங்குன்றம் தீயணைப்பு மீட்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு  வீரர்கள் காரின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

