/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கீழப்பனங்காடியில் வீடுகளை சூழ்ந்த தண்ணீரால் அவதி
/
கீழப்பனங்காடியில் வீடுகளை சூழ்ந்த தண்ணீரால் அவதி
ADDED : அக் 16, 2024 05:14 AM

மதுரை, : 'கண்மாய் நீரை திறந்து வீணாக்கும் மீன்பிடிப்போரால் கீழப்பனங்காடி குடியிருப்புவாசிகள் அவதிப்படுவதாக' புலம்புகின்றனர்.
மதுரை மேற்கு ஒன்றியம் பேச்சிக்குளம் ஊராட்சி கீழப்பனங்காடியில் சமீபத்திய மழைக்கு இங்குள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
தண்ணீர் வடியாமல் 3 நாட்களாக பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இங்கு தண்ணீர் தேங்க காரணம், கீழப்பனங்காடி கண்மாய்.
இது பத்து ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு ஐந்தாண்டுகளாக சிலர் சட்ட விரோதமாக மீன்பிடிக்கும் வேலையில் இறங்குகின்றனர். இதற்காக சில மாதங்களுக்கு முன்பே, மீன் குஞ்சுகளை வாங்கி விட்டு விடுவர்.
குறிப்பிட்ட காலத்திற்கு பின் அவற்றை சட்ட விரோதமாக பிடிக்கின்றனர்.
அதற்கு ஏதுவாக கண்மாய் தண்ணீரை திறந்து விடுகின்றனர்.
மழைநீருடன் அந்த தண்ணீரும் கீழப்பனங்காடி வீடுகளை சூழ்ந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் சிரமப்படுகின்றனர்.
வீட்டை விட்டு வெளியேறவும், உள்ளே செல்லவும் இயலாமல் அவர்கள் தவிக்கின்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் சிலர் கூறுகையில், ''விவசாய ஆயக்கட்டுகள் இல்லாத இக்கண்மாயில் 3 மடைகள் உள்ளன.
அதில் நடுமடைப் பகுதியில் ஷட்டரை திறந்து வெளியேற்றும் சிலரால் தேங்கிய தண்ணீர் வீணாகிறது.
இப்பகுதியினரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது.
இக்கண்மாய்க்கு வவசாய நிலம் இல்லாததால் மடைகளை அடைத்தால் இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம்'' என்றனர்.