/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கரும்பு விளைச்சலும் விலையும் 'இனிக்குது' மேலுார் விவசாயிகள் மனம் துள்ளி குதிக்குது

ADDED : ஜன 05, 2025 05:02 AM

மேலுார் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வாங்க வெளி மாநில வியாபாரிகள் மேலுார் பகுதியில் முகாமிட்டுள்ளதால் கரும்பு விற்பனை களைகட்ட துவங்கியுள்ளது.
மேலுார் தாலுகாவிற்குட்பட்ட பல்லவராயம்பட்டி, எட்டிமங்கலம், சருகு வலையபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளனர். 15 கரும்புகள் கொண்டது ஒரு கட்டு ஆகும். ஒரு மாட்டு வண்டிக்கு 20 கட்டுகள், ஒரு லாரிக்கு 300, டாரஸ் லாரிக்கு 450 கட்டுகள் ஏற்றப்படுகின்றன. தற்போது ஒரு கட்டு கரும்பின் விலை ரூ.360 க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பல்லவராயம்பட்டி விவசாயி பாண்டி: மேலுார் பகுதி செம்மண் நிறைந்த பகுதி என்பதால் கரும்பின் சுவை அதிகம். அதனால் வியாபாரிகள் போட்டி போட்டு விலைக்கு வாங்கி வெளி மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். கரும்பு விதை நடவு செய்வது முதல் அறுவடை செய்வது வரை 12 மாதத்திற்கு ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் செலவாகிறது.
கரும்பின் வளர்ச்சி மற்றும் நிறத்தை பொறுத்து குறைந்தளவு லாபம் கிடைக்கிறது. கரும்பு விவசாயிகளை அரசு ஊக்கப்படுத்துவதற்கு நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து விலையை நிர்ணயம் செய்வதோடு மானிய விலையில் இடுபொருட்களை வழங்க வேண்டும் என்றார்.