ADDED : மார் 01, 2024 06:38 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான் : மதுரை பெத்தானியாபுரம் ஜூலியஸ் பிரபாகர் 56. ஜெராக்ஸ் மிஷின் விற்பனை மற்றும் சர்வீஸ் தொழில் செய்தார். இவருக்கு மேலக்கால் பகுதியில் ஒரு ஏக்கர் தரிசு நிலம் உள்ளது.
நேற்று இங்கு வந்தவர் தொழிலில் தொடர் நஷ்டம் காரணமாக அப்பகுதி கிணற்றில் குதித்து தற்கொலை செய்யப் போவதாக அலைபேசியில் உறவினர்களுக்கு தகவல் கூறினார்.
சோழவந்தான் தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) கண்ணன் தலைமையில் வீரர்கள் கிணற்றில் இருந்து ஜூலியஸ் பிரபாகர் உடலை மீட்டனர். காடுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.
