/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கைப்பந்து போட்டி சுந்தரராஜா பள்ளி வெற்றி
/
கைப்பந்து போட்டி சுந்தரராஜா பள்ளி வெற்றி
ADDED : அக் 27, 2024 04:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில் : அழகர்கோவில் சுந்தரராஜா உயர்நிலைப் பள்ளியில் 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மாவட்ட கைப்பந்து போட்டிநடந்தது.
ஆண்கள் பிரிவில் 42 அணிகள், பெண்கள் பிரிவில் 42 அணிகள் பங்கேற்றன.
பெண்களுக்கான 14, 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சுந்தரராஜா உயர்நிலைப் பள்ளி அணிகள்முதலிடம் பெற்றன. இதன் மூலம் மாநில போட்டிகளுக்கு இருஅணிகளும் தகுதிபெற்றன. மாணவியரை மண்டல இணை கமிஷனர் செல்லத்துரை, அறங்காவலர்கள் பாண்டியராஜன், ரவிக்குமார், செந்தில் குமார், மீனாட்சி, உடற்கல்வி ஆய்வாளர் வினோத், முன்னாள் எஸ்.பி., பாஸ்கரன்,கைப்பந்து கழக சேர்மன் ராஜேந்திரன், தலைமை ஆசிரியர் செல்வராஜ் பாராட்டினர்.