ADDED : ஜன 28, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : திருவாலவாயநல்லுாரில் மீனாட்சி மில்ஸ் ஜி.எச்.சி.எல்., பவுண்டேஷன் டிரஸ்ட் மற்றும் பெட்கிராட் சுய தொழில் பயிற்சி நிறுவனம் சார்பில் தொழில் பயிற்சி முடித்த பெண்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராம் தலைமை வகித்தார். தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள் ரூபி முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார். டிரஸ்ட் சி.எஸ்.ஆர்., சுஜின் பயிற்சியின் நோக்கம், சுய தொழில் துவங்குவது, தயாரித்த பொருட்களை சந்தைப்படுத்துதல், குழுக்களாக இணைந்து செயல்படுதல் குறித்து பேசினார். பயிற்சி உபகரணங்களை ஊராட்சி தலைவர் சகுபர் சாதிக் வழங்கினார். துணைத் தலைவர் மாலிக், வார்டு உறுப்பினர்கள், பயிற்சியாளர் அகல்யாபாய், குடும்ப நல ஆலோசகர் கதிரவன் பங்கேற்றனர்.