ADDED : ஏப் 10, 2026 11:03 PM
மதுரை: சட்டசபை தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் த.வெ.க., நாம் தமிழர் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக சவுராஷ்டிரா அரசியல் ஒருங்கிணைப்புக் குழு (எஸ்-பேக்) தலைவர் கிஷோர் குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மதுரையில் நடந்த அரசியல் எழுச்சி மாநாட்டில் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பளிக்க அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தோம். அதை ஏற்று மதுரை தெற்கு தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் சுமதியை அறிவித்த சீமானுக்கும், த.வெ.க., வேட்பாளர் கோபிசனை அறிவித்த விஜய்க்கும் நன்றி. அ.தி.மு.க., தி.மு.க., கூட்டணிகள் எங்கள் சமூக வேட்பாளர்களை அறிவிக்காதது ஏமாற்றம். எனவே த.வெ.க., நாம் தமிழர் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க உள்ளோம் என்றார்.
எஸ்-பேக் இணைச் செயலாளர்கள் சுரேஷ், கோபி, இளைஞர் அணி செயலாளர் உதயா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
