/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கண்காணிப்பு கேமராக்கள்; ஆசிரியைகள் புகார் மனு
/
கண்காணிப்பு கேமராக்கள்; ஆசிரியைகள் புகார் மனு
ADDED : ஆக 19, 2025 01:15 AM
மதுரை; 'திருமங்கலத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் வகுப்பறைகளில் ஆசிரியைகளை நோக்கி வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை அகற்ற வேண்டும்' என சி.இ.ஓ, ரேணுகாவிடம் மனு அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் அளித்த மனு: இப்பள்ளியில் உபரியாக இருந்த ஆசிரியை சபரியம்மாள் நிர்வாகம் நெருக்கடி காரணமாக மனநோயாளியாக சிகிச்சை பெற்றார். 5 ஆண்டுகளாக அவரை காணவில்லை. போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். பதவி உயர்வுக்கு தகுதியுள்ள ஆசிரியர்களை 'பதவி உயர்வு வேண்டாம்' என கட்டாயப்படுத்தி நிர்வாகம் கடிதம் பெற்றுள்ளது. அக்கடிதங்களை கல்வித்துறை ஏற்கக் கூடாது.
வகுப்பறையில் ஆசிரியைகள் பாடம் நடத்தும்போது அவர்களை நோக்கி கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி நிர்வாகி, தனி அறையில் இருந்து ஆசிரியைகளை உடல்ரீதியாக வர்ணித்து 'கமெண்ட்' செய்யும் செயல்களில் ஈடுபடுகிறார். வகுப்பறை கேமராக்களை அகற்ற உத்தரவிட வேண்டும். இதுபோன்ற மனித உரிமை மீறல் செயல்பாடுகள் குறித்து கல்வி அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.