ADDED : மார் 15, 2026 06:17 AM
அ நிறம் | அளவு
மதுரை: திருப்பரங்குன்றம் மாணிக்கம் ராமசாமி கல்லுாரியில் மாவட்ட அளவிலான கல்லுாரிகளுக்கிடையே டி-20 கிரிக்கெட் போட்டி நடந்தது. இறுதிப் போட்டியில் மாணிக்கம் ராமசாமி கல்லுாரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி அணி 2ம் இடம் பெற்றது. சிறந்த பேட்ஸ்மேனாக வின்சன், பவுலராக மீர் முகமது, ஆல் ரவுண்டராக இசக்கிப்பாண்டி தேர்வாகினர். இயக்குநர் கலைசெல்வன் பரிசு வழங்கினார். பொறுப்பு முதல்வர் அருணா, உடற்கல்வி இயக்குநர் கவுதம், உதவி இயக்குநர் பிரியா, தொடர்பு அலுவலர் குகன் பங்கேற்றனர்.
