தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பெரியாறு கூட்டுக்குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுங்கள் 

 பெரியாறு கூட்டுக்குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுங்கள் 

 பெரியாறு கூட்டுக்குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுங்கள் 


ADDED : ஜூன் 10, 2026 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை நகரில் பெரியாறு கூட்டுக்குடிநீர் வினியோகத்தை சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குமாரிடம் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மனுக்கள் அளித்தனர்.

மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா தலைமையில் கமிஷனரை சந்தித்தனர். அவரிடம் மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விசாரணை முடங்கியுள்ளதை விரைவுபடுத்த வேண்டும். பெரியாறு கூட்டுக்குடிநீர் பல வார்டுகளில் சரியாக கிடைக்கவில்லை, சீரமைக்க வேண்டும்.

மாநகராட்சி பம்பிங் ஸ்டேஷன்களை மேம் படுத்தி கழிவுநீரை முறையாக வெளியேற்ற வேண்டும், 100 வார்டுகளிலும் உள்ள மழை நீர் கால்வாய்களை துார்வார வேண்டும், நகரில் தேங்கும் குப்பையை முறையாக அகற்ற வேண்டும். அப்பணியை செய்ய தவறும் தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்து மாநகராட்சியே நிரந்தர துாய்மைப் பணியாளர்கள் மூலம் பணியை மேற்கொள்ள வலியுறுத்தினர். அவரவர் வார்டுகளில் உள்ள பிரத்யேக குறைகளை பட்டியலிட்டு மனுவாக அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us