UPDATED : அக் 12, 2026 05:13 PM
ADDED : அக் 12, 2026 04:54 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் பாரதிதாசன் அகாடமி மற்றும் இளைஞர்களின் வெற்றிப் பயணம் சார்பில் வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி நடந்தது.
செயலாளர் சூர்யா வரவேற்றார். மாணவர்கள் துர்கா, கோகுலஸ்ரீ, முகிலன் முதல் 3 பரிசை வென்றனர். பெரிய சவுளி, பூவிகா சிறப்பு பரிசை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிர்வாகிகள் ரொக்கம், சான்றிதழ், புத்தகங்களை வழங்கினர். தமிழ்நாட்டு கல்வி இயக்கம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் கர்ணன், நிர்வாகிகள் மணிக்குமார், வன்னி ராஜா, தேவி, தமிழர் மக்கள் இயக்கம் தங்கம் அடைக்கண், மரபு வேளாண்மை செயற்பாட்டாளர் திருமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அகாடமி தாளாளர் ஜீவா நன்றி கூறினார்.
