நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுாரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 24வது தாலுகா மாநாடு நடந்தது.
மாவட்ட செயலாளர் இளங்கோவன், தலைவர் வேல்பாண்டி தலைமை வகித்தனர். கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.
நெல் குவிண்டால் 1க்கு ரூ. 3500, நெல்லின் ஈரப்பதம் 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்.
மின்சார திருத்த சட்டத்தை கைவிட வேண்டும். மேலுார் முழுவதும் கண்மாய், நீர்வழிப் பாதைகளை துார்வார வேண்டும். 70 கிராம கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை திறப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் தாலுகா தலைவராக ராஜேஸ்வரன், செயலாளராக ராஜாமணி, பொருளாளராக பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டனர்.

