ADDED : மார் 14, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் சொற்பொழிவு நடந்தது. சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார். இதில் புதுச்சேரி வாழ் அரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வளர்மதி 'வாணிதாசனின் படைப்புவளம்' என்ற தலைப்பில் பேசினார்.
அவர் பேசியதாவது: இயற்கைக் கவிஞர் என்று பாராட்டப்பட்டவர் வாணிதாசன். கொடிமுல்லை, தமிழச்சி காப்பியங்களில் பெண்ணைக் காவியத்தலைவியாக முன்னிறுத்தியவர். 20க்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழ் இலக்கிய உலகிற்கு அளித்துள்ளார். கைம்பெண் கொடுமை, விதவை மறுமணம், பெண்ணுரிமை, பெண் கல்வி, பெண் விடுதலையை தமிழச்சி காவியத்தில் பாடியுள்ளார் என்றார். வாணிதாசன் மகள் ஐயை, தமிழறிஞர்கள், சி.எஸ்.ஐ., கல்லுாரி மாணவிகள் பங்கேற்றனர். ஆய்வறிஞர் சோமசுந்தரி ஒருங்கிணைத்தார்.
