ADDED : மார் 19, 2026 04:30 AM
அ நிறம் | அளவு
மதுரை, -- மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது. சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார்.
ஆய்வு வளமையர் ஜான்சிராணி வரவேற்றார். சென்னை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை உதவிப்பேராசிரியர் பாலசுப்பிரமணியன் 'மதுரையின் வரலாற்றில் பெண்கள்' என்ற தலைப்பில் பேசினார். சங்க காலம் முதல் சுதந்திர போராட்டம் வரை மதுரையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெண் தலைவர்களைப் பற்றி விளக்கினார்.
ஆய்வறிஞர் சோமசுந்தரி நன்றி கூறினார்.
