ADDED : டிச 12, 2025 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில், அம்பிகா மகளிர் கல்லுாரி, அன்னை பாத்திமா கல்லுாரி சார்பில் தமிழ்க்கூடல் நடந்தது.
இயக்குநர் பர்வீன் சுல்தானா 'பாரதி என்றொரு மானிடன்' என்ற தலைப்பில் பேசுகையில், ''12 வயதில் பாட்டெழுத துவங்கிய பாரதி, 39 ஆண்டுகள் வாழ்ந்தார். கவிஞனுக்கு மரணமே கிடையாது.
பாரதியின் எழுத்தில் சக்தி, கருணை, பேரன்பு, அக்னி இருந்தது. 'பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயங்கொள்ளலாகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா' என்ற அவரது பாடல் வரிகளை அடுத்த தலைமுறையினர் படிக்க வேண்டும் என்றார். ஆய்வறிஞர் சோமசுந்தரி ஒருங்கிணைத்தார்.

