ADDED : ஏப் 16, 2026 10:40 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 'சங்க இலக்கியம் இன்றைய தலைமுறைக்கு என்ன சொல்கிறது' எனும் தலைப்பில் தமிழ்க்கூடலுரை நடந்தது.
சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார். கிரசென்ட் மகளிர் கல்வியியல் கல்லுாரி உதவிப் பேராசிரியை டெய்ஸி ராணி முன்னிலை வகித்தார். மதுரை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தனலட்சுமி பேசுகையில், ''ராமனின் பிறன்மனை நோக்காத பண்பை கம்பர் நயமாக குறிப்பிடுகிறார். தம்பதிகளின் ஒற்றுமை, விட்டுக்கொடுத்தலை ஐந்திணை ஐம்பது பாடல் கூறுகிறது. ஒழுக்கம், நட்பு, இல்லறத்தின் இனிமை, காதல் ஆகியவற்றை சங்க இலக்கியங்கள் கற்றுக் கொடுக்கின்றன'' என்றார்.
சங்க ஆய்வறிஞர் சோமசுந்தரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாணவிகள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
