ADDED : ஆக 20, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ‘சங்கப் பாடல்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ என்ற தலைப்பில் தமிழ்க்கூடல் நடந்தது.
காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் பேசுகையில், ‘‘சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் மூலம் உலக உயிர்கள் நலமுடன் வாழ முடியும். மாணவர்கள் சங்க இலக்கியங்களை படிப்பதுடன் இயற்கையை நேசிக்க வேண்டும்’’ என்றார். சங்கத் தமிழ் காட்சிக்கூட விளக்குநர் புஷ்பநாச்சியார் ஒருங்கிணைத்தார். அமெரிக்கன் கல்லுாரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.
