ADDED : ஆக 26, 2026 07:33 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் ‘சங்க இலக்கியங்களில் வரலாற்று செய்திகள்’ என்னும் தலைப்பில் தமிழ்க்கூடல் நடந்தது.
லேடி டோக் கல்லுாரியின் ஆய்வு மாணவர் அறிவுமதி பேசுகையில், ‘‘சங்க இலக்கியங்கள் தமிழர்களின் அரசியல், போர், ஆட்சி, பொருளாதாரம், வணிகம், சமூக வாழ்க்கை, பண்பாடைப் பற்றி பல வரலாற்று செய்திகளை வழங்குகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மதுரையில் இரவு நேரக் கடைகள் இயங்கியதை மதுரைக்காஞ்சி எடுத்துரைக்கிறது’’ என்றார்.
சங்கத் தமிழ்க் காட்சிக்கூட விளக்குநர் புஷ்பநாச்சியார் ஒருங்கிணைத்தார். பொன்முடியார் பெண்கள் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்றனர்.
