UPDATED : அக் 29, 2026 10:45 PM
ADDED : அக் 29, 2026 10:41 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் ‘திருக்குறளில் மன அழுத்த மேலாண்மை’ தலைப்பில் தமிழ்க்கூடல் நடந்தது.
சங்க ஆய்வு வளமையர் ஜான்சிராணி வரவேற்றார். தனி அலுவலர் அவ்வை அருள் வழிகாட்டினார். புதுார் அல்அமீன் பள்ளி தலைமையாசிரியர் ஷேக்நபி முன்னிலை வகித்தார். பழனியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரி உதவி பேராசிரியர் லட்சுமி பிரியா பேசுகையில், ‘‘திருக்குறள்களை கடைபிடித்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். எதிர்பார்ப்பு மற்றும் பற்றற்ற நிலை, பேசும் சொற்களில் கட்டுப்பாடு, நேர்மறை சிந்தனை போன்றவற்றை திருக்குறள் போதிக்கிறது. மன அழுத்த மேலாண்மைக்கான மூச்சுப் பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்’’ என்றார். சங்க ஆய்வறிஞர் சோமசுந்தரி நன்றி கூறினார்.
