ADDED : செப் 16, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
மதுரை: உலகத் தமிழ்ச் சங்கத்தின் சங்கத் தமிழ்க்காட்சிக் கூடத்தில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடந்தது.
சங்க இலக்கியத்தில் பொய் கூறாமை என்ற தலைப்பில் செந்தாமரை கல்லுாரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் ஜன்னத் பேசினார். சங்க இலக்கியத்தில் பொய் கூறாமை என்பது உயர்ந்த அறமாக பார்க்கப்படுகிறது. சங்க கால புலவர்கள் பொய்யாக பிறரை புகழுரை செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டார்.
காட்சிக் கூட விளக்குநர் புஷ்பநாச்சியார் ஒருங்கிணைத்தார். இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் செல்வம் ராமசாமி, வண்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
