நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் யாதவர் கல்லுாரி தமிழ் உயராய்வு மையமும், உலகத் தமிழ்ச் சங்கமும் இணைந்து 'தமிழ் இலக்கிய வெளியில் கைலாசபதியின் உரை யாடல் நோக்கு' என்ற தலைப்பில் தமிழ்க் கூடல் நடந்தது.
சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார். யாதவர் கல்லுாரி உதவிப்பேராசிரியர் சுப்பிர மணியன் முன்னிலை வகித்தார்.
நெல்லை சவேரியார் கல்லுாரி தமிழ்த் துறைத் தலைவர் இதயராஜா பேசுகையில், 'தமிழ் பண்பாட்டு நெறிமுறைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் செயல் பட்டவர் கைலாசபதி. அவர் ஆய்வாளர், சிந்தனையாளர் என பன்முகத்திறமையுடன் விளங்கினார்' என்றார். ஆய்வறிஞர் சோமசுந்தரி ஏற்பாடு செய்தார்.

