ADDED : ஏப் 03, 2026 06:40 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை உலகத்தமிழ் சங்கத்தில் தமிழ்க் கூடல் நிகழ்ச்சி நடந்தது. இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார். திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் முனியாண்டி முன்னிலை வகித்தார்.
மீனாட்சி கல்லுாரி முதல்வர் வானதி தொலைநோக்கு பார்வையில் தமிழ் ஆய்வுகள் என்ற தலைப்பில் பேசுகையில், 'தமிழ் ஆய்வு என்பது வெறும் இலக்கியம், இலக்கணத்தை உள்ளடக்கியது மட்டுமல்ல. மொழியியல், தொல்லியல் உள்ளிட்ட துறைகளின் ஒருங்கிணைந்த பரப்பு தமிழ் இலக்கியம். வகுப்பறையிலிருந்து ஆய்வு மனப்பான்மைக்கு மாணவர்கள் வருவது அவசியம்' என்றார். ஆய்வறிஞர் சோமசுந்தரி ஏற்பாடு செய்தார்.
