/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டோல்கேட்களை அதிகரிக்க கூடாது தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஆட்சேபனை
/
டோல்கேட்களை அதிகரிக்க கூடாது தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஆட்சேபனை
டோல்கேட்களை அதிகரிக்க கூடாது தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஆட்சேபனை
டோல்கேட்களை அதிகரிக்க கூடாது தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஆட்சேபனை
ADDED : பிப் 04, 2025 05:21 AM
மதுரை: தமிழகத்தில் டோல்கேட்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
சங்கத்தலைவர் ஜெகதீசன் தெரிவித்ததாவது: இந்தியாவில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கி.மீ., தேசிய நெடுஞ்சாலையில் 1041 டோல்கேட்கள் (சுங்கச்சாவடிகள்) உள்ளன.
தமிழகத்தில் அதிகபட்சமாக 72 சாவடிகள் உள்ள நிலையில் இதனை 90 ஆக உயர்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக 10 டோல்கேட்களில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதி, உயர்நீதிமன்ற உத்தரவின் படி 60 கி.மீ., இடைவெளியில் டோல்கேட் அமைக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 60 கி.மீ., துாரத்திற்குள் உள்ள டோல்கேட்கள் அகற்றப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே பார்லிமென்டில் அறிவித்துள்ளார். நகர்ப்புற எல்லையில் இருந்து 15 கி.மீ.,ல் டோல்பிளாசா இருக்கக்கூடாது. ஆனால் மதுரையைச் சுற்றியுள்ள கப்பலுார், சிட்டம்பட்டி, எலியார்பத்தியில் செயல்படும் டோல்கேட்கள் 15 கி.மீ., துாரத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே டோல்கேட் கட்டணம் அதிகமாக உள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் புதிய அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோல்கேட்களை அதிகரிக்கும் அறிவிப்பை மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என்றார்.

