/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'‛டங்ஸ்டன் டெண்டர்' வரை வேடிக்கை பார்த்தது தமிழக அரசு; ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

ADDED : ஜன 05, 2025 05:15 AM
மதுரை : ''டங்ஸ்டன் சுரங்கத்திட்டத்திற்கான டெண்டர் விடும் வரை வேடிக்கை பார்த்த தமிழக அரசு, கடைசி நேரத்தில் அதை எதிர்ப்பது புதிராக உள்ளது'' என மதுரையில் த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
கட்சியின் தென்மாவட்ட அடிப்படை உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா மதுரையில் நடந்தது. அதில் நிருபர்களிடம் ஜி.கே. வாசன் கூறியதாவது:
ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்களை எப்படி அடைத்தார்களோ அதுபோல மதுரையில் நீதி கேட்டு போராடிய பா.ஜ. பெண் நிர்வாகிகளை ஆட்டு கொட்டகையில் அடைத்தனர். கூட்டணி கட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன் தி.மு.க. அரசின் அடக்குமுறையையும் தவறுகளையும் நேரடியாக முதல்வரிடம் சுட்டிக்காட்டியது ஆட்சியின் தவறான போக்கை காட்டுகிறது.
டங்ஸ்டன் சுரங்கத் திட்ட விவகாரத்தில் மக்களுக்கு பாதகமாக இருந்தால் அதை செயல்படுத்தக் கூடாது என்பதில் அ.தி.மு.க., -த.மா.கா., ஒத்த கருத்துடன் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக டெண்டர் போடும்போது தமிழக அரசு வேடிக்கை பார்த்துவிட்டு கடைசி நேரத்தில் அதை எதிர்த்தது புதிராக இருக்கிறது என்றார்.