sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

தமிழகத்தில் கடல் நீர்மட்டம் உயர்வதால் அழிவை சந்திக்கும் அலையாத்தி காடுகள்

/

தமிழகத்தில் கடல் நீர்மட்டம் உயர்வதால் அழிவை சந்திக்கும் அலையாத்தி காடுகள்

தமிழகத்தில் கடல் நீர்மட்டம் உயர்வதால் அழிவை சந்திக்கும் அலையாத்தி காடுகள்

தமிழகத்தில் கடல் நீர்மட்டம் உயர்வதால் அழிவை சந்திக்கும் அலையாத்தி காடுகள்


ADDED : ஜூலை 27, 2025 07:22 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 07:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பத்தாண்டுகளாக கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும் தொழிற்சாலை கழிவுகளாலும் தாழ்வான பகுதிகளில் வளரும் அலையாத்தி காடுகள் அழிவை சந்தித்து வருகின்றன. அதேநேரம் தமிழக வனத்துறை சார்பில் இவற்றை மீட்டெடுக்கும் முயற்சிகளும் அதிகரித்துள்ளன என்கிறார் பறவைகள் ஆராய்ச்சியாளர் ரவீந்திரன்.

இந்தியாவில் உள்ள அலையாத்தி காடுகளுடன் ஒப்பிடும் போது தமிழகத்தின் பங்கு 6.9 சதவீதம் தான். ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் சேறு கலந்த சதுப்பு நிலங்களில் அலையாத்தி தாவரங்கள் வளர்கின்றன. உலகளவில் 68 வகை தாவரங்கள் இருந்தாலும் தமிழகத்தில் 16 வகை தாவரங்கள் உள்ளன. குறிப்பாக தில்லை, கழுதை முள்ளி, நீர்முள்ளி, நரிக்கண்டல், வெண்கண்டல், கருங்கண்டல், கன்னா செடிகள் அதிகமாக உள்ளன. பரவலாக எல்லா இடங்களில் சுரபுன்னை தாவரங்கள் வளர்கின்றன. தமிழகத்தில் திருவாரூர் முத்துப்பேட்டை, கடலுார் பிச்சாவரம், ராமநாதபுரத்தில் காரங்காட்டில் அதிகளவில் அலையாத்தி காடுகள் உள்ளன.

பல்லுயிர் தன்மைக்கு பாதுகாப்பு இதுதொடர்பாக ரவீந்திரன் கூறியதாவது: காலநிலை மாற்றத்தால் கடல்நீரின் வெப்பம் அதிகரித்து வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட வெப்பத்தின் தாக்கத்தால் தொடர் புயல் வருகிறது. அதை கட்டுப்படுத்துவதற்கும் வீசும் அலைகளை கட்டுப்படுத்துவதற்கான ஒரே ஆயுதம் அலையாத்தி தாவரங்கள் தான். கடலில் பல்லுயிர் தன்மை அதிகரிப்பதற்கு இத்தாவரங்களே காரணம். நிலத்தில் உள்ள கார்பனை விட 10 மடங்கு அதிகமாக கரியமில வாயுவை கட்டுப்படுத்துவதால் இதற்கு 'நீலகரிக்காடு' என்றொரு பெயரும் உண்டு.

2012க்கு பிறகு தான் இதுகுறித்து தமிழகத்தில் தீவிர ஆய்வுகள் நடந்தன. அதன்பிறகே இத்தாவர விதைகள் சேகரிப்பு போன்ற முயற்சிகள் நடக்கின்றன. ஐந்தாண்டுகளாக முழுவீச்சில் வனத்துறை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பகுதிகளில் சேரும் தொழிற்சாலை கழிவுகள், கழிவுநீர் அதிகமாக கலந்தாலும் அமிலத்தன்மை அதிகரித்து தாவரங்களின் வளர்ச்சி தடைபடும்.

அவற்றின் விதை முளைப்புத்தன்மை பாதிக்கப்படும். இயற்கை சீற்றத்தால் ஏற்படும் மாற்றங்களோடு மனிதர்களால் ஏற்படும் அழிவுகளில் இருந்தும் இவற்றை மீட்க வேண்டும். வனத்துறை சார்பில் அலையாத்தி காடுகளின் பரப்பை அதிகரிப்பதற்கு தீவிர முயற்சிகள் செய்யப்பட்டாலும் மனிதர்களால் உருவாக்கும் கழிவுகளை கடலோர பகுதிகளில், கழிமுகங்களில் சேராமல் தடுக்க வேண்டியதும் அரசின் கடமை என்றார்.






      Dinamalar
      Follow us