/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'பஸ் பாஸ்' விதிமுறை தமிழறிஞர்கள் புலம்பல்
/
'பஸ் பாஸ்' விதிமுறை தமிழறிஞர்கள் புலம்பல்
ADDED : ஜன 19, 2026 05:21 AM
மதுரை: வயதான தமிழறிஞர்களுக்கு அரசு பஸ்களில் வழங்கப்படும் இலவச பஸ் பாஸ்களில் கொண்டு வந்துள்ள மாற்றத்தை திரும்பப்பெற வேண்டும் என அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நலச்சங்க தென்மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.
குழுத் தலைவர் மார்ஷல்முருகன் கூறியதாவது:
தமிழுக்கு பாடுபட்டவர்களுக்கு அரசு பஸ்களில் இலவச பாஸ் வழங்கப்படுகிறது. அதில் தமிழறிஞருடன் உதவியாளராக ஒருவர் செல்லவும் அனுமதி இருந்தது.
தற்போது அதை மாற்றி உதவியாளராக செல்பவருடைய போட்டோ ஒட்ட வேண்டும். எல்லா பயணங்களிலும் ஒரே நபர் உடன்வருவதற்கு சாத்தியமில்லை. அதனால் பழைய முறையிலேயே வழங்க வேண்டும்.
அதேபோல இணையத்தில் பாஸ் பெறும்போது சாதாரண பேப்பரில் தருகின்றனர். அதையும் பழைய முறையிலேயே வழங்க வேண்டும். அரசு பஸ்களின் சலுகை பட்டியலில் தமிழறிஞர்களையும் சேர்க்க வேண்டும், என்றார்.

