தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ராகுல் நிகழ்ச்சிக்கு 'டார்கெட்' :காங்., நிர்வாகிகள் திணறல்

ராகுல் நிகழ்ச்சிக்கு 'டார்கெட்' :காங்., நிர்வாகிகள் திணறல்

ராகுல் நிகழ்ச்சிக்கு 'டார்கெட்' :காங்., நிர்வாகிகள் திணறல்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: சென்னையில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்கும் 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சிக்கு, ஒரு லட்சம் கல்லுாரி மாணவரை திரட்ட 'டார்கெட்' விதித்துள்ளதால் நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் மாணவர்களின் பிரச்னைகளை கேட்டறிய 'மாணவர்களின் குரல்' என்ற நிகழ்ச்சி மூலம் கல்லுாரி மாணவர்களை சந்தித்து ராகுல் உரையாடுகிறார். இதில் நீட் தேர்வு, அரசு தேர்வுகள் வினாத்தாள் கசிவு, வேலை வாய்ப்பின்மை, கல்விக்கான நிதி குறைப்பு உட்பட பல்வேறு தலைப்புகள் விவாதிக்கப்படுகின்றன.

இதுவரை இந்துார், புனே உட்பட 5 இடங்களில் நடத்துள்ளன. 6வதாக சென்னை தீவுத்திடலில் அக்.,10ல் நடக்கிறது. இதில் 1 லட்சம் கல்லுாரி மாணவர்களை பங்கேற்க செய்ய தமிழக காங்., முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாவட்டம் வாரியாக 2 ஆயிரம் மாணவர்களை திரட்ட வேண்டும் என மாவட்ட தலைவர்களுக்கு 'டார்கெட்' விதித்துள்ளது.

*

சவால் என புலம்பல்



அவர்கள் கூறியதாவது: சென்னையில் 50 ஆயிரம், பிற மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரம் பேர் திரட்ட மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் உத்தரவிட்டுள்ளார். கல்லுாரிகளுக்கு சென்று மாணவரை சந்தித்து 'கியூஆர்' கோடு மூலம் வருகையை உறுதி செய்து, அவர்களை வாகனங்கள் மூலம் சென்னைக்கு அழைத்து வரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் மதுரை, திண்டுக்கல் தவிர சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கல்லுாரி மாணவர்கள் கிடைப்பதே சவாலாக உள்ளது. காங்., நிகழ்ச்சியா என கேட்டு பலர் பதிவு செய்யவே தயங்குகின்றனர். மாணவர்களை அழைத்து சென்றுவர மாநில தலைமை எவ்வித நிதியும் மாவட்டங்களுக்கு ஒதுக்கவில்லை. இதுபோன்ற நடைமுறை பிரச்னைக்கு மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தீர்வுகாண வேண்டும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us