sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வரி குறைப்பிற்கு மடீட்சியா வரவேற்பு

/

வரி குறைப்பிற்கு மடீட்சியா வரவேற்பு

வரி குறைப்பிற்கு மடீட்சியா வரவேற்பு

வரி குறைப்பிற்கு மடீட்சியா வரவேற்பு


ADDED : ஆக 21, 2025 06:41 AM

Google News

ADDED : ஆக 21, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மத்திய அரசின் ஜி.எஸ்.டி., வரி குறைப்பு நடவடிக்கையானது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் தருவதாக உள்ளதென மதுரை மடீட்சியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

சங்கத் தலைவர் கோடீஸ்வரன் கூறியதாவது:

பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி., வரி விகிதங்களை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைத்து அறிவித்துள்ள முடிவை மடீட்சியா சங்கம் வரவேற்கிறது.

இந்த நடவடிக்கை மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையின் மேம்பாட்டிற்கும் புதிய அத்தியாயத்தைத் தரும். வரிச்சுமை குறைவதால் உற்பத்திச் செலவு குறையும். அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவதால் பொதுமக்கள் அவற்றை அதிகளவில் வாங்குவர்.

இது தயாரிப்பாளர்களின் விற்பனை மற்றும் லாபத்தை நேரடியாக அதிகரிக்கும். கணக்கு மற்றும் வரி தாக்கல் செய்வதில் உள்ள சிக்கல் குறைந்து வணிக வளர்ச்சியில் கவனம் செலுத்த முடியும்.

அதே நேரத்தில் தற்போதுள்ள சிக்கலான வரி அமைப்புகளை மேலும் எளிமையாக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us