ADDED : பிப் 24, 2026 06:12 AM
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பரங்குன்றம் கிளை செயற்குழுக் கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. பொதுக் குழு உறுப்பினர் வினோத்குமார் வரவேற்றார். வட்ட செயலாளர் ராமசந்திரன் தீர்மானங்களை முன்மொழிந்தார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் 'அரசு உயர், மேல் நிலை ஆசிரியர்களுக்கு ஓய்வுபெறும் நாளில் அவர்களின் ஈட்டிய விடுப்பு நாட்களை ஒப்படைப்பு செய்து இழப்பின்றி பணம் பெறுகின்றனர். ஆனால் தொடக்க கல்வித் துறை ஆசிரியர்களுக்கு அதை கணக்கிடாமல் விடுப்பு விதிகளுக்கு முரணாக வட்டாரக் கல்வி அலுவலர்கள் (பி.இ.ஓ.,க்கள்) கணக்கீடு செய்கின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பல்வேறு மனுக்கள் அளித்துள்ளனர்.
அவற்றின் மீது நடவடிக்கை இல்லை இதை கண்டித்து திருப்பரங்குன்றம் பி.இ.ஓ., அலுவலகத்தில் மார்ச் 6 முதல் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் வளர்மதி நன்றி கூறினார்.
