UPDATED : ஜூன் 29, 2026 02:51 PM
ADDED : ஜூன் 29, 2026 04:10 AM
சோழவந்தான்:- சோழவந்தான் -விக்கிரமங்கலம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கல்புளிச்சான்பட்டியை சேர்ந்த ராஜபாண்டி மகன்கள் சித்திக் 24,சித்தார்த் 28. இருவரும் 2024 மார்ச்சில் மேலக்காலில் உறவினர் வீட்டு காதணி விழாவிற்கு சென்றனர்.அங்கு திருமங்கலம் அருகே செங்குளத்தை சேர்ந்த செல்வம் மகன் முத்தையா 23, உடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கல்புளிச்சான்பட்டி அருகே மூவரும் ஒன்றாக மது அருந்தினர்.அப்போது ஏற்பட்ட தகராறில் முத்தையாவை கத்தியால் குத்தி கொலை செய்தனர். ஜாமினில் வெளிவந்த இருவரும் கல்புளிச்சான் பட்டியில் தங்கள் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு விக்கிரமங்கலம், செக்கானுாரணி ரோட்டில் உண்டாங்கல் மலை குளத்துப்பட்டி பிரிவு அருகே சித்திக் 23, வெட்டு காயங்களுடன் இறந்துகிடந்தtர். முத்தையா கொலைக்கு பழிக்குபழியாக இக்கொலை நடந்திருக்கலாம் என விக்கிரமங்கலம் போலீசார் தெரிவித்தனர்.
