
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் பூமேட்டு தெரு உச்சி மாகாளியம்மன், வடகத்தி காளியம்மன் கோயில் உற்ஸவம் மார்ச்12ல் கொடியேற்றம், அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மார்ச் 15 திருவிளக்கு பூஜையை தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். 18ல் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. நேற்று பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமத்தலைவர் மணிமுத்தையா, வார்டு கவுன்சிலர்கள் வள்ளி மயில், மருதுபாண்டியன் உட்பட பலர் செய்தனர்.

