ADDED : மார் 23, 2026 06:25 AM
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வடக்குப்புற காளியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் பொய் சொல்லா மெய் அய்யனார் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், பூத்தட்டு எடுத்தும் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பிறகு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இன்று (மார்ச் 23) முளைப்பாரி ஊர்வலம், மார்ச் 24 முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும்.
முத்து மாரியம்மன் கோயில் திருவிழா மேலுார், மில்கேட் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு நேற்று கோயிலில் இருந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்து அருகில் உள்ள ஊருணியில் கரைத்தனர்.
பின்னர் பூத்தட்டு எடுத்து ஊர்வலமாக சென்றனர். அங்கு அம்மனுக்கு மலர்களால் அபிஷேகம் நடந்தது. பிறகு மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெற்றது.
