/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பணிகளை துவக்கியது கோயில் போலீஸ் ஸ்டேஷன்
/
பணிகளை துவக்கியது கோயில் போலீஸ் ஸ்டேஷன்
ADDED : ஏப் 21, 2025 06:26 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் நியமிக்கப்பட்டுள்ள போலீசாருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கென புதிய போலீஸ் ஸ்டேஷன் அறிவிக்கப்பட்டு
ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ., க்கள் உள்பட 29 பேர் நியமிக்கப்பட்டனர். சில தினங்களுக்கு முன்பு பெரியரத வீதி தனியார் மண்டபத்தில் கோயில் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழா நடந்தது. கோயில் வளாகம், கிரிவலப் பாதை, மலை மேல் பாதுகாப்பு பணியில் கோயில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதிகள், மலைமேல் காசி விஸ்வநாதர் கோயில், மலை உச்சிப் பகுதி, நெல்லித்தோப்பு, புதுப் படிக்கட்டு, பழைய படிக்கட்டு, பழநி ஆண்டவர் கோயில் பகுதி, பெரிய ரத வீதி பள்ளிவாசல் பகுதிகளில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கோயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இப்பணிகளில் ஏற்கனவே பணியில் இருந்த மதுரை நகர் போலீசார் விடுவிக்கப்பட்டனர். கோயில் போலீசார் தவிர 16 ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என இன்ஸ்பெக்டர் ராஜதுரை தெரிவித்தார்.