ADDED : ஜன 28, 2025 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை யூனியன் கிளப்பில் ராமச்சந்திரன் நினைவு அகில இந்திய டென்னிஸ் சங்கம் சார்பில் 14 வயது ஆடவர், மகளிருக்கான ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டி யூனியன் கிளப்பில் நடந்தது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடக வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆடவர் இறுதிப் போட்டியில் தமிழக வீரர் தன்வின் வெங்கடேஷ்குமார் 6 --- 0, 2 - - 6, 6 - 3 செட்களில் கர்நாடக வீரர் விஷ்ணுராஜனை வீழ்த்தினார். மகளிர் இறுதிப் போட்டியில் தமிழக வீராங்கனை ஆதிரை நரேந்திரன் 4 -- 6, 6 -- 0, 6 - 4 செட்களில் மற்றொரு வீராங்கனை சாதனா சம்பத்குமாரை வீழ்த்தினார்.
லயன்ஸ் சங்க மாவட்ட முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம் பரிசு வழங்கினார்.
டென்னிஸ் சங்க உறுப்பினர்கள் சுப்ரமணியன், சத்யன், யூனியன் கிளப் தலைவர் பாக்கியம், செயலாளர் சின்னதுரை கலந்து கொண்டனர்.

