ADDED : பிப் 12, 2025 04:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : செம்மினிபட்டி ஆண்டி பாலகர் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிப். 2 காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. நேற்று வேல் குத்தியும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கியும், கரும்பில் தொட்டியில் கட்டியும் நேர்த்தி கடன் செலுத்தினர். மந்தையிலிருந்து பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். அதற்கு முன்பாக சிவன் கோயிலில் இருந்து சாமியாடி கொண்டு வந்த பாலை கொண்டு வேலுக்கு பாலாபிஷேகமும், அன்னதானமும் நடந்தது.
இக் கோயிலில் முருகன் சிலைக்கு பதிலாக வேல் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

