தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தங்கரதம் புறப்பாடு ரத்து

தங்கரதம் புறப்பாடு ரத்து

தங்கரதம் புறப்பாடு ரத்து


ADDED : அக் 29, 2024 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2024 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நவ. 2 முதல் நவ. 9 வரை தங்க ரதம் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோயிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி தங்கரதம் புறப்பாடு நடக்கிறது.

திருவிழா காலங்களில் உற்ஸவர்கள் புறப்பாடு நடப்பதால் தங்க ரதம் புறப்பாடு ரத்து செய்யப்படும். அதன்படி நவ. 2 முதல் நவ. 8 வரை கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு கோயிலுக்குள் உற்ஸவர்கள் புறப்பாடு நடப்பதாலும், நவ. 9ல் உற்ஸவர் சாந்தி நிகழ்ச்சி நடப்பதாலும் அந்நாட்களில் தங்கரதம் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us