ADDED : செப் 13, 2026 02:05 AM

வாடிப்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோட்டைச் சேர்ந்தவர் ராணுவவீரர் ஜெபபாஸ்டின் 29. இவருக்கும் சக்கையாநாயக்கனுார் மரியவெல்சியாவுக்கும் 26, இன்று(செப்.,13) திருமணம் நடக்கவிருந்தது.
நேற்று மதுரையில் நடந்த செவிலியர் பணிக்கான அரசு தேர்வு எழுத தனது வருங்கால கணவருடன் டூவீலரில் சென்றார். அதிகாலை 4:00 மணிக்கு திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டிக்கு முன் சாணம்பட்டி பிரிவு அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த காரின் முன்புற டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் டூவீலரில் மோதியதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் மரிய வெல்சியா சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜெபபாஸ்டின் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் மணப்பெண் இறந்தது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
