தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கலெக்டர் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

கலெக்டர் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

கலெக்டர் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்


UPDATED : நவ 24, 2026 08:53 PM

ADDED : நவ 24, 2026 08:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2026 08:53 PM ADDED : நவ 24, 2026 08:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீப துாணில் தீபம் ஏற்றாததற்கு பலதரப்பிலும் கண்டனங்கள் குவிந்துள்ளது

* பதவி நீக்கம் செய்ய வேண்டும்



கதலி நரசிங்க பெருமாள், பா.ஜ., மாநில செயலாளர்: திருப்பரங்குன்றத்தில் மலை மீது நீதிமன்றம் தீர்ப்பின்படி திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. இது அப்பட்டமான சட்ட மீறலாகும். தேச அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒரு அவமதிப்பு நடவடிக்கையாகும். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும் கூட அறநிலையத்துறை ஏற்க மறுப்பது ஹிந்துக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். ஹிந்துக்கள் உரிமையை பறிக்கும் செயல்.

காலம் காலமாக இருக்கின்ற மரபுகளுக்கு எதிராக தமிழர் பண்பாட்டுக்கு எதிரான ஒரு தாக்குதலாக இதை பா.ஜ., கருதுகிறது. இதற்கு காரணமான கலெக்டர், ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் மீது விசாரணை நடத்தி அனைவரையும் நிரந்தரமாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். உரிய தண்டணையும் வழங்க வேண்டும்.

* சர்வாதிகாரி ஆட்சி நடக்கிறதோ



விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் சந்திரசேகரன்: சட்டத்திற்கு கட்டுப்படாதவர்கள் யாரும் இல்லை. திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் திருக்கார்த்திகை அன்று மட்டும் தீபம் ஏற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது. ஆனால் சிறுபான்மையினர் ஓட்டு வங்கியை மனதில் வைத்துக்கொண்டு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மதச்சார்பற்றவராக இருக்க வேண்டிய முதல்வர் விஜய், அவரது அமைச்சர்கள் ஹிந்துக்களுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்படுகின்றனர். அதற்கான விளைவுகளை த.வெ.க., ஆட்சியாளர்கள் சந்திப்பது உறுதி. விரைவிலேயே த.வெ.க., அரசு மக்கள் மனங்களில் இருந்து துாக்கி எறியப்படும்.

தமிழகத்தில் அரசியலமைப்பு நெருக்கடி



* சுந்தர்ராமன், மாநில அமைப்பாளர், தொழில்துறை வல்லுநர் பிரிவு, பா.ஜ.,

உச்ச நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றுவதாக தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட உறுதியை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தனது உத்தரவில் பதிவு செய்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படும் என மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், தீபத்துாணில் தீபம் ஏற்றப்படவில்லை.

நீதிமன்றத்தில் அரசு அளிக்கும் உறுதிகளின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை இது சிதைக்கிறது. இது அரசியலமைப்பு நெருக்கடி.

இதற்கு முதல்வர் ஜோசப் விஜய் பொறுப்பேற்க வேண்டும். இந்த அரசைப் பதவியிலிருந்து நீக்க அரசியலமைப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us