ADDED : நவ 05, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார் இன்று (நவ.,5) வண்டியூர், செல்லுார், கரிசல்குளம், ஆனையூர், நாராயணபுரம் கண்மாய்களில் கழிவு அகற்றும் பணியை பார்வையிட்டார்.
முன்னதாக வண்டியூர் பூங்காவின் முன்புறம் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். விற்பனைக்கு வைத்துள்ள ஈரக்கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களை மக்களுக்கு வழங்கினார்.
உதவி கமிஷனர் தமிழரசன், செயற்பொறியாளர் அர்ச்சனா, உதவி செயற்பொறியாளர்கள் ஆரோக்கிய சேவியர், காமராஜ், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் பங்கேற்றனர்.
