ADDED : ஜன 01, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பகுதிகளில் ஆடிப்பட்டத்தில் விதைத்த சோளம் தற்போது விளைந்து அறுவடை பணியை விவசாயிகள் துவக்கி உள்ளனர்.
நடப்புப் பருவத்தில் போதிய அளவில் மழை பெய்ததால் மானாவரியில் சாகுபடி செய்யப்பட்ட சோளம் நல்ல வளர்ச்சி கண்டு உள்ளது. அறுவடை பருவத்தை எட்டியதால் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. விளைச்சலும், விலையும் திருப்தியாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விவசாயிகள் சிலர் கூறுகையில், சோளக்கதிர்களை அறுத்து ரோட்டில் உலர்த்தி வருகிறோம். வேளாண் துறை சார்பில் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்க வேண்டும். மற்ற பகுதிகளில் அறுவடை இயந்திரம் வாடகைக்கு விடப்படுகிறது. இதை அரசு அதிகாரிகள்தான் ஏற்படுத்தித் தர வேண்டும்'' என்றனர்.