/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அணையில் எடுக்கும் குடிநீரை ஆற்றுக்குள் விடும் மாநகராட்சி
/
அணையில் எடுக்கும் குடிநீரை ஆற்றுக்குள் விடும் மாநகராட்சி
அணையில் எடுக்கும் குடிநீரை ஆற்றுக்குள் விடும் மாநகராட்சி
அணையில் எடுக்கும் குடிநீரை ஆற்றுக்குள் விடும் மாநகராட்சி
ADDED : ஆக 13, 2025 02:23 AM
மதுரை; மதுரையின் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு எடுத்து ஒன்றரை ஆண்டுகளாக ஆற்றுக்குள் வீணாகும் நீரை தடுத்து நிறுத்த மாநகராட்சி அதிகாரிகள் முன்வராதது ஏனென்று தெரியவில்லை.
மதுரைக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. பெரிய குழாய்களில் வரும் இக்குடிநீர் இடைப்பட்ட பகுதியில் உடைப்பெடுத்து வீணாவதை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. துவரிமானில் முத்தையா கருப்பணசாமி கோயில் எதிரே ஒரு ரோடு செல்கிறது. இந்த ரோட்டின் குறுக்கே புதைத்துள்ள குடிநீர் குழாயில் ஆங்காங்கே 5 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஒன்றரை ஆண்டுகளாக 24 மணி நேரமும் தண்ணீர் வெளியேறி வீணாக ஆற்றுக்குள் செல்கிறது.
ரூ. பல கோடி செலவிட்டு கொண்டு வரும் குடிநீர் வீணாவது குறித்து அப்பகுதியினர் மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அதனை பார்வையிட்ட அதிகாரிகள் கசியும் குடிநீர் பகுதியில் குழாய் அமைத்து ஆற்றுக்குள் விழும்படி செய்துள்ளனர். அதனை நிரந்தரமாக சரிசெய்ய யாரும் முன்வராததால் ஆண்டுக்கணக்கில் குடிநீர் வீணாகிறது.
குடிநீர் வீணாவது மட்டுமின்றி, வெளியில் உள்ள கழிவுநீர், துாசியும் குடிநீரில் கலக்க வாய்ப்புள்ளது. சுத்திகரித்து வரும் நீர் மாசுபட்டால் பொதுமக்கள் பாடு திண்டாட்டமாகும் என்பதால் மாநகராட்சி கமிஷனர் சித்ரா இதற்கு சிறப்பு கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.