/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காட்சிப் பொருளானது பொன்னகரம் ரேஷன் கடை; மின் இணைப்பு கிடைக்காமல் இழுபறி

ADDED : பிப் 23, 2026 06:12 AM

மதுரை: 'மதுரை பொன்னகரம் பிராட்வேயில் தயாராக உள்ள புதிய ரேஷன் கடை எப்போது திறக்கப்படும்' என மக்கள் ஏக்கத்தில் தவிக்கின்றனர்.
பொன்னகரம் பிராட்வே பகுதியில் பல ஆண்டுகளாகவே ரேஷன் கடை வாடகை கட்டடத்தில் இயங்கியது. இங்கு புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர்.
இதையடுத்து எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சம் செலவில் புதிய கடை கட்டடப்பட்டது. பணிகள் முடிந்து 2 மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாததால், காட்சிப்பொருளாகவே உள்ளது.
பொது விநியோக திட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மின் இணைப்பு இழுத்தடிப்பு மார்க்சிஸ்ட் கவுன்சிலர் ஜென்னியம்மாள்: ரேஷன் கடையில் பணிகள் முடிந்து விட்டன. இன்னும் மின்னிணைப்பு மட்டும் தரவில்லை. மேலப்பொன்னகரம் மெயின் ரோட்டில் ரூ.7 லட்சம் மதிப்பில் மேலும் ஒரு ரேஷன் கடை கட்டியுள்ளோம். புதிய கடையின் மின்னிணைப்புக்கு விண்ணப்பித்து ஒரு மாதமாகி விட்டது. மின்வாரியத்தினர் யாரும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. இணைப்பு கிடைத்ததும், புதிய கடைகளை திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.