/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மலைமேல் குமாரர் திருவிழா அக்.17ல் வேல் எழுந்தருளல்
/
மலைமேல் குமாரர் திருவிழா அக்.17ல் வேல் எழுந்தருளல்
மலைமேல் குமாரர் திருவிழா அக்.17ல் வேல் எழுந்தருளல்
மலைமேல் குமாரர் திருவிழா அக்.17ல் வேல் எழுந்தருளல்
ADDED : அக் 02, 2025 03:27 AM
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் அக்.,17ல் மலை மேல் குமாரருக்கு (சுப்ரமணிய சுவாமிக்கு) வேல் எடுக்கும் விழா நடக்கிறது.
நக்கீரருக்கு சாப விமோசனம் கொடுக்க சுவாமி வேல் மூலம் பாறையில் கீரி, கங்கைக்கு நிகரான தீர்த்தத்தை சுனையில் உருவாக்கியதை நினைவு கூரும் வகையிலும், மழை வேண்டியும், திருப்பரங்குன்றம் கோயில் மூலவர் கரத்திலுள்ள தங்க வேல் மலை மேல் கொண்டு செல்லும் விழா அக். 17ல் நடக்கிறது.
அன்று மூலவர் கரத்தில் உள்ள தங்க வேலுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து மலர்களால் அலங்கரிக்கப்படும். சிறப்பு மற்றும் பொது பூஜை முடிந்து கிராமத்தினருக்கு மரியாதை செய்யப்பட்டு, பல்லக்கில் வேல் வைக்கப்பட்டு ரத வீதிகளில் உலா சென்று மலைமேல் கொண்டு செல்லப்படும். அங்கு சுப்ரமணியர் கரத்தில் வேல் சேர்ப்பிக்கப்படும்.
உச்சி கால நேரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, பஞ்சலிங்கம், நத்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவருக்கு பூஜை முடிந்து, கோயில் சிவாச்சாரியார்களால் வேல், சுனை தீர்த்தத்திற்குள் எடுத்துச் செல்லப்பட்டு அபிஷேகம் நடக்கும். கிராமத்தினர் சார்பில் 105 படி அரிசியில் கதம்ப சாதம் தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்படும்.
மாலையில் வேல் புறப்பாடாகி மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழநி ஆண்டவர் கரத்தில் சேர்ப்பிக்கப்படும். இரவு வேல், சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனைக்குப்பின்பு பூப்பல்லக்கில் வேல் புறப்பாடாகி வீதி உலா முடிந்து சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர் கரத்தில் மீண்டும் சேர்ப்பிக்கப்படும்.