தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சினிமா...

 சினிமா...

 சினிமா...


ADDED : செப் 17, 2026 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 06:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மீண்டும் இணையும் சசிகுமார் -- சமுத்திரகனி

நண்பர்களான சசிகுமாரும், சமுத்திரகனியும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சைமா விருது விழாவில் இருவருக்கும் விருதும் கிடைத்தது. இந்த நிகழ்வில் தாங்கள் இணையும் புதிய படத்தை அறிவித்துள்ளனர். 'ஸ்கூல் பஸ்' என பெயரிடப்பட்டுள்ள இதை சமுத்திரகனி இயக்க, சசிகுமார், கிச்சா சுதீப், மிஷ்கின் உள்ளிட்டோரும் நடிக்க, தமிழ், தெலுங்கு, கன்னட மொழியில் தயாராகிறது. பள்ளி நண்பர்கள் அதன்பிறகான வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பது கதை.

கடும் தண்டனை வேண்டும் அனு மோல்

'பாரிஸ் கபே' படத்தில் ஆணவக் கொலைக்கு எதிராக போராடும் சமூக செயற்பாட்டாளராக நடிகை அனு மோல் நடித்துள்ளார். அவர் கூறியது, ''இந்த படத்தில் என் கேரக்டர் அழுத்தமாக இருந்ததால் ஒப்புக் கொண்டேன். குரு சோமசுந்தரத்துடன் இரண்டாவது முறையாக நடிக்கிறேன். ஜாதி கொடுமை, காதல் திருமணம், ஆணவக் கொலை என பல விஷயங்களை இந்த கதை பேசுகிறது. இந்திய அளவில் ஜாதியின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆணவக் கொலை விஷயத்தில் இன்னும் கடுமையான தண்டனைகள் வேண்டும்'' என்றார்.

5 மொழிகளில் உருவாகும் 'பீல் மை லவ்'

ஹரி பிரகாஷ் இயக்கத்தில் எம்.எஸ்.பாஸ்கர், அவர் மகன் ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜ் அய்யப்பா, மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகும் படம் 'பீல் மை லவ்'. வாழ்வில் எந்தக் கட்டத்திலும் அதிசயம் நிகழலாம் என்ற கருப்பொருளை மையமாக வைத்து காதல், நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகிறது.

நான் யாருக்கும் போட்டியில்லை: நிமிஷா

சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்துள்ள 'என்ன விலை' படம் இன்று ரிலீசாகிறது. படம் பற்றி நிமிஷா கூறுகையில் ''இந்த படத்தில் எனக்கான கதாபாத்திரம் பற்றி சொன்னதும் இயக்குனரை கட்டிப்பிடித்து அழுதேன். அழகான, வலுவான கதாபாத்திரம் என்பதால் உணர்வுபூர்வமாக இருந்தது. நான் யாருக்கும் போட்டி இல்லை. தமிழில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க காத்திருக்கிறேன்'' என்றார்.

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் தமிழ்படம்

2024ல் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியானது 'மகாராஜா'. நல்ல வரவேற்பை பெற்று சீன மொழியிலும் டப் ஆகி ரிலீசானது. ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. ரூ.15 கோடி கொடுத்து ஹாலிவுட் நிறுவனம் ஒன்று இப்பட உரிமையை வாங்கி உள்ளது. மேத்யூ மெக்கானாகே நடிக்கிறார். இதன்மூலம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை 'மகாராஜா' பெறுகிறது.

'திரிஷா இல்லன்னா நயன்தாரா' ரீ-ரிலீஸ்

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்த், மனிஷா யாதவ் நடிப்பில் 2015ல் வெளியான படம் 'திரிஷா இல்லன்னா நயன்தாரா'. அடல்ட் கன்டன்ட் கலந்த காமெடி படமாக வந்தது. இதை இப்போது 11 ஆண்டுகளுக்குபின் வரும் அக்டோபர் 24ல் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.

டிஸ்கோ சாந்திக்கு என்னாச்சு

நடிகை டிஸ்கோ சாந்தி ஐதராபாத்தில் வசிக்கிறார். மருத்துவமனையில் இருக்கும் போட்டோவை இவர் வெளியிட்டு இருந்தார். என்னாச்சு என கேட்டபோது அவர் கூறியதாவது, ''நெருங்கிய தோழியின் அம்மா காலமானதால் சில தினங்களுக்கு முன் சென்னை வந்தேன். ஐதராபாத் திரும்பியதும் கடும் உடல் வலி, காய்ச்சல். உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்தேன். சென்னையில் பல இடங்களில் வைரஸ் காய்ச்சல் என கேள்விப்பட்டேன். எனக்கும் எப்படியோ தொற்றிக் கொண்டது. சின்ன வைரஸ் காய்ச்சல் என நினைத்தேன், ஆனால் பாடாய்படுத்திவிட்டது. அனைவரும் கவனமாக இருங்கள். உடல்வலி, காய்ச்சல் இருந்தால் உடனே சிகிச்சை எடுங்க'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us