/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குப்பை இங்கே... தொட்டி எங்கே... நாறுது பொதுப்பணித்துறை வளாகம்
/
குப்பை இங்கே... தொட்டி எங்கே... நாறுது பொதுப்பணித்துறை வளாகம்
குப்பை இங்கே... தொட்டி எங்கே... நாறுது பொதுப்பணித்துறை வளாகம்
குப்பை இங்கே... தொட்டி எங்கே... நாறுது பொதுப்பணித்துறை வளாகம்
ADDED : ஆக 03, 2025 05:15 AM
மதுரை : தல்லாகுளம் பொதுப்பணித்துறை வளாகத்தில் மாநகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்காததால் அங்குள்ள அலுவலகங்களில் தேங்கும் குப்பையை பணியாளர்கள் எரிப்பதை வழக்கமாக்கியுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன் வரை இந்த வளாகத்தில் மட்டும் மாநகராட்சியின் 2 குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டு தினமும் காலையில் அவை சுத்தம் செய்யப்பட்டன. அதன்பின் குப்பைத்தொட்டி மாயமான நிலையில் தற்போது வரை தொட்டி மீண்டும் அங்கு வைக்கப்படவில்லை. தொட்டி இல்லாததால் கட்டட மூலைகள், கவனிப்பாரற்ற பகுதிகளில் குப்பையை எரிக்கின்றனர் பணியாளர்கள். இவ்வாறு வாரத்தில் 3 நாட்கள் குப்பைக்கு தீவைக்கின்றனர்.
பொதுப்பணி, நீர்வளத்துறை அலுவலர்கள் கூறியதாவது: எங்கள் துறைகளின் சார்பில் மாநகராட்சிக்கு சொத்துவரி, குப்பைவரி செலுத்துகிறோம். ஆனாலும் குப்பைத்தொட்டியை வைக்க மாநகராட்சிக்கு மனமில்லை. ஊழியர்கள் குப்பையை மொத்தமாக அள்ளி வெளியே உள்ள மாநகராட்சி குப்பைத்தொட்டியில் கொட்டுகின்றனர். சில நேரம் காகித குப்பையை எரிக்கின்றனர். குப்பைத் தொட்டி வைத்தால் இப்பிரச்னை சரியாகும் என்றனர்.

