UPDATED : அக் 08, 2026 12:59 AM
ADDED : அக் 08, 2026 12:56 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அரவிந்த் கண் காப்பு அமைப்பு நிறுவனர் டாக்டர் ஜி. வெங்கடசாமி நினைவு விருது வழங்கும் விழா மதுரையில் நடந்தது. கண் நலத் துறையில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் பால் கோர்ட்ரைட், கண் டாக்டர் சூசன் லெவல்லன் ஆகியோருக்கு டாக்டர் ஜி. வெங்கடசாமி நினைவு விருதை கோவெல் அறக்கட்டளை தலைவர் டாக்டர் ஆர். கிம் வழங்கினார்.
அரவிந்த் கண் காப்பு அமைப்பின் செயல்பாடுகள் பிரிவு இயக்குநர் துளசிராஜ் ரவில்லா, அமைப்பின் தலைவர் டாக்டர் ரவீந்திரன், லைக்கோ செயல் இயக்குநர் திவ்யா ராமசாமி, மூத்த நிறுவன உறுப்பினர்களான டாக்டர்கள் நாச்சியார், ஸ்ரீனிவாசன், விஜயலட்சுமி கலந்து கொண்டனர்.
