/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
யங் இந்தியன்ஸ் அமைப்பின் குறிக்கோள் ‛'பசுமை இந்தியா'
/
யங் இந்தியன்ஸ் அமைப்பின் குறிக்கோள் ‛'பசுமை இந்தியா'
யங் இந்தியன்ஸ் அமைப்பின் குறிக்கோள் ‛'பசுமை இந்தியா'
யங் இந்தியன்ஸ் அமைப்பின் குறிக்கோள் ‛'பசுமை இந்தியா'
ADDED : ஏப் 02, 2025 03:34 AM
மதுரை : 'பசுமையான இந்தியா உருவாக்குவதே எங்கள் அமைப்பின் குறிக்கோள்' என யங் இந்தியன்ஸ் காலநிலை மாற்றம் பிரிவு தலைவர் பொன்குமார் பேசினார்.மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் யங் இந்தியன்ஸ் காலநிலை மாற்றம், பசுமை மேலாண்மை அமைப்பு சார்பில் 5000 மரக்கன்று நடும் விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கினார்.
இதில் பொன்குமார் பேசியதாவது: 'பூல் டே டூ கூல் டே'என்ற பெயரில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக மரக்கன்று நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். 'பூல் டே' நாளில் மற்றவரை ஏமாற்றும் எண்ணம் மாணவர்களிடம் அதிகம் இருக்கிறது. அந்த எண்ணத்தை மாற்றவும், மறக்க முடியாத நாளாக்கவும் இந்த தினத்தில் திட்டத்தைத் துவங்கினோம். பெரிய நெல்லி, சீதா, பாதாம், கொய்யா, நாவல் மரக்கன்றுகளை கல்லுாரியில் மட்டுமல்லாது மாணவர்களின் வீடு, பொது இடங்களிலும் நடுவதற்கு அறிவுரை வழங்குகிறோம்.
மதுரையில் தொடங்கி கோவை, திருச்சி, வேலுார் என பல மாவட்டங்களில் விரிவடைந்துள்ளது. இது தவிர கண்மாய் துார்வாருதல், மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்தியாவில் எங்கும் பசுமை நிறைந்திருக்க வேண்டும் என்பதே குறிக்கோள் என்றார்.
துணைத் தலைவர்கள் மதுமிதா, சந்தான அய்யப்பன், யங் இந்தியன்ஸ் மதுரை அமைப்பாளர் சங்கர் லால், பசுமை மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் பங்கேற்றனர். மரக்கன்று நட 99622 20666 ல் தொடர்பு கொள்ளலாம்.

