/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பழுதான வாகனத்தை குப்பை ஆக்கிய பேரூராட்சி நிர்வாகம்
/
பழுதான வாகனத்தை குப்பை ஆக்கிய பேரூராட்சி நிர்வாகம்
பழுதான வாகனத்தை குப்பை ஆக்கிய பேரூராட்சி நிர்வாகம்
பழுதான வாகனத்தை குப்பை ஆக்கிய பேரூராட்சி நிர்வாகம்
ADDED : நவ 10, 2025 01:16 AM

அலங்காநல்லுார்: இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழுதான குப்பை சேகரிக்கும் வாகனத்தை மதுரை ரோட்டில் நிறுத்தி சென்றதை பேரூராட்சி நிர்வாகம் மறந்து விட்டதால் வாகனம் துருப்பிடித்து வீணாகிறது.
இப்பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள், கடைகள் திருமண மண்டபங்களில் குப்பை சேகரிக்க அரசு தள்ளு வண்டி, வேன், டிராக்டர்களை வழங்கியது. இவ்வாறு வழங்கிய தள்ளு வண்டிகளின் சக்கரங்கள் பழுதாகி பல வீணாகி கிடக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன் வழங்கிய 'பேட்டரி' வாகனங்களும் பராமரிப்பின்றி, பழுது நீக்கும் வசதி இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள் பேரூராட்சி அலுவலகத்தில் குப்பையோடு குப்பையாகி வருகிறது. இதனால் வார்டுகளில் குப்பை சேகரிக்கும் பணிகள் பாதிக்கிறது. மேலும் 2 ஆண்டுகளுக்கு முன் பழுதான ஒரு வாகனத்தை மதுரை ரோட்டின் மரத்தடியில் நிறுத்தி சென்றனர். இன்றுவரை அதை 'அம்போ'வென விட்டுவிட்டதால் வாகனத்தின் டயர்கள், இரும்பு பகுதிகள் என அனைத்தும் துருப்பிடித்து வீணாகி வருகிறது.
சொந்த வாகனம் என்றால் யாராவது இப்படி தெருவில் நிறுத்தி செல்வரா என்று அதை 'கண்காட்சி' போல பார்க்கும் பொதுமக்கள் தினமும் கேள்வி எழுப்பிச் செல்கின்றனர்.

